பெங்களூரு, : ‘தேர்தல் விதிமீறல்களுக்கு எதிரான புகார்களுக்காக திறக்கப்பட்ட ‘சி – விஜில்’ செயலி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 6,711 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மாநில தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.
அறிக்கை விபரம்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் விதிமீறல்களை தடுக்கவும், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் குறித்தும், பரிசு, பணம், மது வினியோகம் போன்ற புகார்களை தெரிவிக்க, ‘சி – விஜில்’ செயலியை, தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், 541 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று 106 புகார்களும் பதிவாகின. இதுவரை பெங்களூரில் 1,348 புகார்கள் உட்பட இந்த செயலியில், 6,711 புகார்கள் வந்துள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement