அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர் வெளியாகியுள்ளது.
12 மணி நேரத்தில் புயல்தென் கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிவப்பு நிற லெஹாங்காவில் அழகு தேவதையாய் ஸ்ரீதேவி விஜயக்குமார்… அசத்தல் போட்டோஸ்!எந்த திசையில்இந்த புயல் செல்லும் பாதை குறித்த தகவல் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. தனியார் வானிலை ஆய்வாளர்கள் சில இந்த புயல் நாட்டின் மேற்கு கடற்கரை நோக்கி நகரும் என சில மாதிரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சில மாதிரிகள் இந்த புயல் ஆரம்பத்தில் வடக்கு நோக்கி நகரும் என்றும் பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் ஓமன் மற்றும் ஏமன் நோக்கி நகரும் என்றும் கூறி வருகின்றனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் புயல்… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!மழை தீவிரமடையும்மேலும் இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் மும்பையை அடைய இந்த புயல் உதவும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இன்னைக்கும் வெயில் சுட்டெரிக்கும்… ஆனா ஒரு மணிக்கு அப்புறம்.. வெதர்மேன் அப்டேட்!கடல் கொந்தளிப்புவரும் ஜூன் 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் ஜூன் 9ஆம் தேதி முதல் முதல் 12ஆம் தேதி வரை குஜராத் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் மாத சம்பளத்தை கூட உரிய நேரத்தில் கொடுக்காமல்.. திமுக அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!புயல் பெயர் பிபர்ஜாய்இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகும் இந்த புயலின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி புதிய புயலுக்கு பிபர்ஜாய் (Biparjoy)என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை பங்களாதேஷ் வைத்துள்ளது. இந்த பெயர் பெங்காலி மொழியில் வைக்கப்பட்டுள்ளது. பிபர்ஜாய் என்றால் பெங்காலி மொழியில் பேரழிவு ஆகும்.
சிதைந்து போன முகம்… சேதமடைந்த உறுப்புகள்… உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் உறவுகள்!உலக வானிலை அமைப்புஉலக வானிலை அமைப்பு (WMO) தனது உறுப்பு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களின்படி அகரவரிசையில் புயல்களுக்கு பெயரிட்டு வருகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டது. இந்த பெயரை ஏமன் நாடு வைத்தது. மோக்கா என்பது காபி உற்பத்திக்கு பெயர் போன செங்கடல் துறைமுக நகரின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.