எதிர்கட்சிகள் கூட்டணி கரை சேருமா, கரை ஒதுங்குமா? நிதிஷ் குமார் முன்னெடுப்புக்கு பலன் இருக்குமா?

பாஜக அரசு மத்தியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது. முன்னெப்போதையும் விட கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக பல்வேறு மாநிலங்களில் கால் ஊண்றியுள்ளது. அதற்கு முன்னர் பரிட்சயம் இல்லாத பகுதிகளிலும் கூட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது, சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளவர்களுடன் கூட்டணியில் உள்ளது.

காங்கிரஸ்
கட்சி கடந்த பத்தாண்டுகளாக தனது கட்டமைப்பை மெல்ல மெல்ல இழந்து வரும் சூழலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக சமர் செய்யும் ஒற்றை கட்சி என்று எந்த கட்சியையும் கை காட்டிவிடமுடியாது. களநிலவரம் இப்படியிருக்க, அந்தந்த மாநிலங்களில் வலிமையாக இருக்கும் பிராந்திய கட்சிகள், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் பீகாரில் அதற்கான முன்னெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது.

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒருங்கிணைக்கும் பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா்
மு.க.ஸ்டாலின்
, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

கலந்துகொள்ளும் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த கூட்டணி தேர்தல் வரை இது நீடிக்குமா, ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பின்னர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் இறுதி செய்யப்படும் பெயர் – சைலேந்திரபாபு குறி வைக்கும் பதவி!

காங்கிரஸ் கட்சியுடன் இன்று ஒன்று சேர்ந்துள்ள பல கட்சிகளுக்கு தங்கள் மாநிலங்களில் கருத்து மோதல்கள் உள்ளன. எனவே மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் அக்கட்சிகள் இணைந்து மக்களை சந்திப்பதில் சிக்கல்கள் உள்ளன. தொகுதிகளை ஒதுக்குவதிலும் இழுபறிகள் வரலாம். 2019இல் சந்திரபாபு நாயுடு இதே வேலையை தான் செய்தார். அவர் தற்போது பாஜகவுடனான கூட்டணிக்கு கதைத் தட்டி வருகிறார். நிதீஷ் குமாருக்கும் அதே நிலைமை ஏற்படலாம் என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.