புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிறகு ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி மக்களுக்கு ஆதரவா அல்லது மோடி அரசுக்கு ஆதரவா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும்.
‘கறுப்பு அவசர சட்டத்தை எதிர்ப்போம்’ என காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் 31 பேரும் அறிவிக்காவிட்டால், இனி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது. முக்கிய விஷயத்தில் குழுவாக இணைந்து செயல்பட காங்கிரஸ் தயங்குகிறது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் அமைதி காப்பது, அதன் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. டெல்லி அவசர சட்டம் குறித்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் விலகியிருந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் மீது பாஜக மேலும் தாக்குதல் நடத்த உதவும். இவ்வாறு ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
பேட்டியில் பங்கேற்காத முதல்வர்: கூட்டத்துக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்கவில்லை. ‘‘விமானத்தை பிடிக்க நேரமாகிவிட்டதால், அவர்கள் பங்கேற்கவில்லை’’ என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.