பேனா நினைவு சின்னம்: கடல் மேல் தயாராகும் கண்ணாடி பாலம்: முக்கிய அப்டேட்!

கலைஞரின் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்து வந்த நிலையில் அதன் கட்டுமான பணி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

கருணாநிதியின் நினைவாக அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

கலைஞர் கருணாநிதியின் நினைவாக வங்க கடலில் 134 அடி உயரத்தில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து கேட்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. ஒன்றிய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்த நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்தது. அத்துடன் சென்னை கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் மூன்று மாதங்களில் நினைவு சின்னம் கட்டுமானம் தொடங்க உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐஐடி நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்களுடன் ஆலோசித்து ஒன்றரை வருடங்களில் நினைவு சின்னம் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட நுழைவு வாயில் கடந்து கடல் மேல் அமைக்கப்படும் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை மக்கள் பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.