விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த முறை ஒளிபரப்பான சீசன் 6-ல் அசீமுக்கு பிக்பாஸ் டைட்டில் பட்டம் கொடுத்தது பல சர்ச்சைகளுக்குள்ளானது. எனினும், பிக்பாஸ் ரசிகர்கள் சீசன் 7 எப்போது? என ஆவலாக கேட்டு வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. எப்போதுமே அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை ஆகஸ்ட் மாதமே தொடங்கவிருக்கிறதாம். இதற்கான புரோமோ ஷூட்டும் விரைவில் ஆரம்பமாகும் என்று சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் படு சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.