இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் ஜூலை 12 முதல் தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார். அதேபோல், முக்கிய வீரரான யுஸ்வேந்திர சாஹலும் இந்த தொடரில் இந்திய அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணிக்கு திரும்பும்பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் சாஹல்
இந்திய அணியின் ஸ்டார் பிளேயர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். அவர் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பம் எண்ணத்தில் இருக்கிறார். இப்போதைய சூழலில் உலகின் டாப் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியை நன்கு அறிந்தவர். சூழலுக்கு ஏற்ப பந்துவீசி கேப்டனின் அழுத்ததை குறைப்பதில் கில்லாடி. அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஸ்வேந்திர சாஹல் 75 சர்வதேச டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் 2023-ல் சம்பவம்
சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசனில் யுஸ்வேந்திர சாஹல் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நல்ல பார்மில் இருக்கும் அவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடரில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். இவரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியை பல டி20 சர்வதேச போட்டிகளில் வென்றுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் இவரை தேர்வு செய்ய எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது.
சாஹலின் ரெக்கார்டு
யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 வடிவத்தில் விளையாடி வருகிறார். யுஸ்வேந்திர சாஹல் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், 75 டி20 சர்வதேச போட்டிகளில் 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 145 ஐபிஎல் போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் யுஸ்வேந்திர சாஹல்.