ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. முதலில் லியோ படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டது. அப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக அதைத்தொடர்ந்து நா ரெடி என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டது.
சாதனை படைத்த நா ரெடி
விஜய்யின் குரலில் விஷ்ணுவின் எழுத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்பாடல் தற்போது இந்தியளவில் வைரலாகி வருகின்றது. தர லோக்கலான இப்பாடலை விஜய் தனக்கே உரிய ஸ்டைலில் பாடி ரசிகர்களை மேலும் ஒருமுறை கவர்ந்துள்ளார். செம மாஸான இப்பாடலில் விஜய்யுடன் இணைந்து மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடனமாடி இருக்கின்றனர்.
Naa Ready: இந்த மூன்று பாடல்களின் காப்பி தான் நா ரெடி பாடலா? ஆதாரத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள்..!
மேலும் 2000 நடனக்கலைஞர்களை வைத்து மிகப்பிரம்மாண்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருபக்கம் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவர மறுபக்கம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. விஜய் இப்பாடல் முழுக்க புகைபிடித்து இருப்பதால் இதன் காரணமாக சில கண்டனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் அதையும் தாண்டி இப்படம் பல சாதனைகளை படைத்து வருகின்றது. யூடியூபில் இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பத்து மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் சாதனையை நா ரெடி பாடல் முறியடித்துள்ளது.
கொண்டாடும் ரசிகர்கள்
பொதுவாக விஜய்யின் பாடல்கள் இணையத்தில் சாதனை படைப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இப்பாடல் அதையெல்லாம் தாண்டி சில மணி நேரங்களிலேயே அதிக அளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்பாடல் இந்தியளவில் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் நா ரெடி என்ற பாடல் லியோ படத்தில் பிளாஷ்பாக் போர்ஷனில் இடம்பெறும் என்றும், இப்பாடல் படத்தில் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.