காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்… மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது, “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களை ஊக்குவிப்பதற்கு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் பதக்கம்

இதையடுத்து அரசாணை எண் 411 ஆனது 03.08.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப பின்வரும் காவல் அதிகாரிகள் அல்லது ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

யார், யாருக்கு?

வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்இரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம்

சிறப்பு பதக்கம்

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய பணியை அங்கீகரித்து

அவர்களுக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த “சிறப்பு பதக்கம்” தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

வெ.பத்ரிநாராயணன்
, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம் அவர்களின், போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளினால், போதை பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக 128 கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு மட்டும், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பல பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக, கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.

டோங்கரே பிரவின் உமேஷ்
, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2790 கிலோ எடையுள்ள 3584 கஞ்சா செடிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 10 வணிக வழக்குகளும் அடங்கும்.

540 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அதில் 69 குற்றவாளிகள் “போதைப் பொருள் குற்றவாளிகள்” என்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,266.9- கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 98 பாட்டில்கள் MEPHENTERMINE SULPHATE INJECTION IP கைப்பற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 345 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மா.குணசேகரன்
காவல் துணை கண்காணிப்பாளர் சேலம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து இரயில் வண்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ”கஞ்சா வேட்டை2.0” மற்றும் ”கஞ்சா வேட்டை3.0”-யின்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்து

சு.முருகன்
, காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம் மற்றும் திரு.இரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, புதுச்சத்திரம் காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் ஆகியே இருவரும் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் மாவட்டம் அவர்களால் காவல் துணை கண்காணிப்பாளர், நாமக்கல் உட்கோட்டம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண அதிக முயற்சி எடுத்து தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவட்டங்களுக்கு பயணம் செய்தும் ஆதாரங்களை திரட்டி அவர்களிடமிருந்து குட்கா பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.