சென்னை: இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது மகனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளைமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
தனது தம்பி தனுஷை இதில் கதாநாயகனான நடிக்கவைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படத்திற்கு ஒருதரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
இயக்குநர் செல்வராகவன்: துள்ளுவதோ இளைமை படத்தைத் தொடர்ந்து தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். காதல் கொண்டேன் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்: காதல் கொண்டேன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன அடுத்தடுத்த படங்களை இயக்கினார். இவை தவிர செல்வராகவன் மற்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படமெல்லாம் காலத்துக்கும் அழியாத படங்களாக உள்ளன.
நடிகர் அவதாரம்: இயக்கத்தில் கவனம் செலுத்திவந்த செல்வராகவன் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமான செல்வராகவன், சாணிக்காயிதம், ஜி மோகன் இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்தார். இவரது நடிப்பு ரசிக்கப்பட்டாலும் செல்வராகவன் மீண்டும் இயக்கத்திற்கு வர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
க்யூட் வீடியோ: நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மகனின் குட்டி சைக்கிளிலில் பின் மகனை அமரவைத்து ஜாலியாக விளையாடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.