மும்பை: பிரபல படத்தயாரிப்பாளரும் இயக்குனரின் பேத்தி கேம் ஷோ என்று வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளார்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய புகழ் பெற்ற ராமானந்தா சாகரின் பேத்தி நடிகை சாக்ஷி சோப்ரா.
இவர் நெட்பிளிக்ஸ் கேம் ஷோவில் நடிக்கும் போது தன்னிடம் பாலியல் கொடுமையை அனுபவித்ததாக பரபரப்பான புகாரை கூறியுள்ளார்.
சாக்ஷி சோப்ரா: பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த சாக்ஷி சோப்ரா, சமூகவலைத்தளப்பக்கத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் விரும்பி பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகும்.
பாலியல் ரீதியாக கொடுமை: இந்நிலையில், சாக்ஷி சோப்ரா நெட்பிளிக்ஸ் கேம் ஷோவில் பங்கேற்ற போது அனுபவித்த பல கொடுமைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், netflix கேம் ஷோவில் கலந்து கொள்ளும் படி ஒரு வருடத்திற்கும் மேலாக என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்து வந்தேன்.

நிபந்தனையுடன் சென்றேன்: அதன்பிறகு netflix டீம் என்னை அணுகி இது எந்தமாதிரியான நிகழ்ச்சி என்று எனக்கு விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில்,பாடுவது, வேடிக்கையான கேம் மட்டுமே இருக்கும் கிசுகிசு இல்லை என்றனர். மேலும் ஒரு நாளைக்கு ஒரு அழைப்பு வரவேண்டும், ஏனென்றால் அம்மா இல்லாமல் என்னால் வாழ முடியாது இதனால், தினமும் அவரிடம் பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் கையெழுத்திட்டு அந்த நிகழ்ச்சிக்குள் சென்றேன்.

ஆபாச பேச்சு: நான் உள்ளே நுழைந்த பிறகு அவர்கள் அம்மாவிடம் பேச அனுமதிக்கவில்லை சரி இது கேம் ஷோ என்று விட்டுவிட்டேன். அப்போது சக நடிகர் மிருதுல் என் மார்பகங்கள் மற்றும் என் கழுத்தையைப் பற்றி வர்ணித்து ஆபாசமாக வெளிப்படையாக பேசினார்.
வீட்டிற்குள் அடைத்துவைத்து: உணவு கொடுக்கவில்லை இப்படி ஒரு வருடமாக என்னை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக சாக்ஷி சோப்ரா தனது இன்ஸ்டா பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரபலமான குடும்பத்தை சேர்ந்த சாக்ஷி சோப்ராவின் இந்த பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.