சர்ச்சை நடிகர்களின் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ?

மலையாள திரையுலகில் நல்ல நடிப்பு திறமை கொண்ட, வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி. இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பின்போது பல்வேறு விதமான தொந்தரவுகளை தருவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு பல புகார்கள் வந்தன. நடிகர் ஷேன் நிகம் மீது, குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார், கதையில் மாற்றங்களை சொல்கிறார், முழு படத்தையும் போட்டு காட்ட சொல்கிறார் மற்றும் ஒரு படத்திற்கு கொடுத்த செய்திகளை இன்னொரு படத்திற்கும் கொடுத்து கால்ஷீட் குளறுபடி செய்கிறார் என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

அதேபோல நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது, போன் அழைப்புகளை அலட்சியப்படுத்துகிறார் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார் மற்றும் சில இடங்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கிறார் என்பது போன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து இந்த இருவர் மீதும் தயாரிப்பாளர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இணைந்து படங்களில் நடிக்க தடை விதித்தனர்.

இதில் ஸ்ரீநாத் பாஷி நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. அதே சமயம் இந்த பிரச்சனை நடந்த சமயத்தில் அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்தார். ஆனால் இப்போது வரை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின்போது இந்த இரு நடிகர்களின் பிரச்சனையும் பேசி சுமுகமாக தீர்க்கப்பட உள்ளது என்றும் இனி அவர்களால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.