மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000… விறுவிறு லிஸ்ட் ஒர்க்… ரெடியான தமிழக அரசு!

தமிழகத்தில் திமுக அளித்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்பது. இதை வெறும் நிதியுதவியாக கருதி விடக் கூடாது. உரிமைத் தொகையாக கருத வேண்டும் என்று தமிழக அரசு முக்கியத்துவம் வாய்ந்த விளக்கம் ஒன்றை அளித்தது. அதன்பிறகு “மகளிர் உரிமைத் தொகை” என்றே அழைக்கத் தொடங்கினர்.

நிதி நெருக்கடிமுதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழக அரசு சந்தித்து வந்த நிதி நெருக்கடியால் இதற்கான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. இந்த நிலையில் தான், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.பிடிஆர் அறிவிப்புஇதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “தகுதி வாய்ந்த” எனக் கூறி தமிழக அரசு குழப்பத்தை உண்டாக்கியது. அப்படியென்ன தகுதி? எதை வைத்து நிர்ணயம் செய்யப் போகிறார்கள்? யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது? எனப் பெரும் விவாதமே வெடித்தது.
அமைச்சரவை மாற்றம்இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் நிதித்துறையில் அதிரடி மாற்றம் வந்தது. ஆடியோ விவகாரத்தால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். மகளிர் உரிமைத் தொகை வழங்க இன்னும் 62 நாட்கள் இருக்கின்றன. இந்நிலையில் உரிமைத் தொகை வழங்க உரிய முன்னேற்பாடுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப அட்டைகள் லிஸ்ட்இதன் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக கூறுகின்றனர். குடும்ப அட்டைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த மகளிர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான பட்டியல் பக்காவாக தயாரிக்கப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா​சென்னையில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஜூன் 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. திருவாரூரில் கலைஞரின் சிறப்புகளை விளக்கும் வகையில் கலைஞர் கோட்டம் ஜூன் 20ஆம் தேதி திறக்கப்பட்டது. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு பல்வேறு விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000இதையெல்லாம் விட பெரிய ஜாக்பட்டாக 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை இருக்கும் எனக் கூறுகின்றனர். முன்னதாக மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் பெரிதும் பயனளித்து வருகிறது. அந்த வரிசையில் 1,000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாக இல்லத்தரசிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.