புதுடெல்லி: மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிரதமர் மோடியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனக் குழுக்களிடையே மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.