மும்பை: தனது முன்னழகை அப்படியே மோல்டு செய்து கோல்டு டிசைனில் உருவாக்கி அதை அணிந்து கொண்டே வெளியிடங்களுக்கு சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத்.
சிறு வயதில் தனது புகைப்படங்கள் ஆபாச இணையத்தில் வந்ததால் வீட்டில் அப்பா தன்னைப் போட்டு அடித்தார். அதனால், வீட்டை விட்டே ஓடி வந்து விட்டேன் என பேட்டிக் கொடுத்த உர்ஃபி ஜாவேத் தற்போது டோட்டலாகவே ஆபாச நடிகையாக மாறி விட்டார் என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.
தங்க நிறத்தில் தனது மார்பை டிசைன் செய்து அதை வைத்தே தனது மேனியை மறைத்துக் கொண்டு திரிவதற்கு அப்படியே வரலாமே என ஏகப்பட்ட திட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஒரு மாசம் ஆனது: நடிகை உர்ஃபி ஜாவேத் முன்னழகு டிசைனில் உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் தங்க கவசம் செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது என்றும் இதற்காக தனது டீம் ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர் என அதன் உருவாக்க வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் ஓடிடி முதல் சீசனில் ஒரே வாரம் தாக்குப்பிடித்து வெளியேறிய உர்ஃபி ஜாவேத் இன்ஸ்டாகிராமில் ஹாட் மாடலையும் தாண்டி ஆபாச மாடலாக வலம் வருகிறார். அரை நிர்வாணமாகவும், டாப்லெஸ் ஆகவும் போஸ் கொடுத்தும், முன்னழகில் ஒரு டேப் மட்டும் ஒட்டிக் கொண்டும் ரெண்டு ஹார்ட் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டும் ஆடையென்று சொல்லி சுற்றித் திரிந்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறார்.
அரெஸ்ட் பண்ண மாட்டாங்க: இப்படி நிர்வாண கோலத்தில் உருவாக்கப்பட்ட கவசத்தை அணிந்து சென்றால் கூட நம்மை அரெஸ்ட் பண்ண மாட்டாங்க என்பதை பல இளம் மாடல்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறார் உர்ஃபி ஜாவேத்.
நிர்வாணமாக போஸ் கொடுத்தால் தான் பிரச்சனை என்றும் மற்றபடி ஆபாசமாக உடை அணிந்து எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என சொல்லி வருகிறார்.
கேவலமாக கேட்கும் ரசிகர்கள்: காசுக்காகத் தான் உர்ஃபி ஜாவேத் இப்படி கண்ட மேனிக்கு திரிந்து வருகிறார் என்றும் இதில், ஃபேஷனும் இல்லை மாடலிங்கும் இல்லை என்றும் வெறும் ஆபாசம் மட்டுமே உள்ளதாகவும், உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஏகப்பட்ட இளைஞர்களையும் இளம் பெண்களையும் கெடுத்து விடுவார் என்றும் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.