கரூரில் 100-க்கும் மேற்பட்ட குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு தங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
