ட்விட்களை பார்க்க வரம்பு நிர்ணயித்தது ட்விட்டர்

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் வரம்பு நிர்ணயித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் சில வாரங்களில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். ஏராளமான ஊழியர்களை நீக்கியதுடன், ப்ளூ டிக் கட்டண முறையையும் கொண்டு வந்தார்.தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பயன்படுத்துவோர் பலர் ட்விட்களை படிக்க முடியவில்லை என நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். நீங்கள் ட்விட்களை பார்க்கும் வரம்பை மிஞ்சிவிட்டீர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால், ட்விட்டர் முடங்கிவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், ட்விட்களை பார்ப்பதற்கு ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் புதிய வரம்பு ஒன்றை நிர்ணயித்துள்ளார்.

அதன்படி ட்விட்டர் பயன்படுத்தும் பெரும்பான்மையோரால் நாள் ஒன்றுக்கு 1,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும்.

ட்விட்டரில் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 600 போஸ்ட்களையும், புதிய கணக்கு தொடங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு 300 ட்விட்களையும் போஸ்ட் செய்யமுடியும் என எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6,000 போஸ்ட்களை மட்டுமே பார்க்க முடியும்.

ட்விட்டருக்கு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில், ‘‘ஒவ்வொருநிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தி ஊழியர்களுக்கு பயிற்சிஅளிக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல்மிகப் பெரிய நிறுவனங்கள் வரை மிக அதிகளவிலான தரவுகளை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற அதிகளவிலான சர்வர்களை ஆன்லைனில் எங்கள் குழுவினர் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்த வரம்புகள் விரைவில் தளர்த்தப்படும். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 8,000 ட்விட்களை பார்க்க முடியும். ப்ளூ டிக் இல்லாத கணக்கு வைத்திருப்போர் 800 ட்விட்களை பார்க்க முடியும்.

தற்போது ப்ளூ டிக் கணக்கு களுக்கு 10,000, ப்ளூ டிக் இல்லாத கணக்குகளுக்கு 1,000, புதிதாக பதிவு செய்பவருக்கு 500 ட்விட்டுகள் என வரம்பு உள்ளது. ட்விட் பயன்பாட்டில் உள்ள இந்த கட்டுப்பாடு தற்காலிகமானது.

இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.