உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய அதிரடி.. மாறிய நிர்வாகிகள்.. ஆட்டம் ஆரம்பமா..?

சென்னை:

இளைஞரணியில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. பல மாவட்டங்களுக்கான இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளராக

பதவியேற்று 4-ம் ஆண்டு நிறைவடைந்து 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி, திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெரியார் – அண்ணா – கலைஞர் – பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் <a href=”https://twitter.com/dmk_youthwing?ref_src=twsrc%5Etfw”>@dmk_youthwing</a> மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின்… <a href=”https://t.co/8LOmB7NZYh”>pic.twitter.com/8LOmB7NZYh</a></p>— Udhay (@Udhaystalin) <a href=”https://twitter.com/Udhaystalin/status/1676595554027991042?ref_src=twsrc%5Etfw”>July 5, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

அவர் பகிர்ந்த அறிவிப்பில், “கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் கழக மாவட்டம், மாநகரங்களுக்கான இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டன.

நேர்காணல் முடிவு மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, இளைஞர் அணிக்கு மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டு மாவட்ட வாரியான நிர்வாகிகளை வெளியிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.