மும்பை: நெபோடிசம் பிரச்சனை பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காரணம் என்ன என்பதற்கு இந்த புகைப்படங்களே ஒரு பெரிய பதிலாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் திறமை வாய்ந்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் ஒரு படம் கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்து வரும் சூழலில் பிரபலங்களின் வாரிசுகள் எளிதாக பாலிவுட்டில் யங் ஹீரோயினாகவும் கவர்ச்சி கன்னிகளாகவும் சமீபத்தில் அதிக அளவில் வலம் வருகின்றன.
ஆலியா பட் தொடங்கி ஆலியா காஷ்யப் வரை பிரபலங்களின் வாரிசுகள் பாலிவுட்டில் எப்படி யங் ஹீரோயின்களாக மாறி உள்ளனர் என்பதும் அவர்கள் சிறு வயதில் எப்படி இருந்து இப்படி ஆளே மாறி உள்ளனர் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
வாரிசு நடிகைகள்: பாலிவுட் முதல் கோலிவுட் வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. அதிலும், குறிப்பாக இந்தி திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகளை கரண் ஜோஹர் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் நடிகர்களாகவும் நடிகைகளாகவும் மாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார் என்றும் அவுட்சைடர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வேலையும் பாலிவுட்டில் நடைபெற்று வருவதாக நெப்போடிச சர்ச்சை பெரிதளவில் வெடித்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் மகள்கள் சிறு வயதில் எப்படி இருந்தார்கள் என்றும் ஹீரோயினாக மாறுவதற்காக அவர்கள் எப்படி சேஞ்ச் ஆகி உள்ளனர் என்கிற புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.
ஷாருக்கான் மகள்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் விரைவில் வெளியாக உள்ள தி ஆர்ச்சீஸ் நெட்பிளிக்ஸ் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

சிறு வயதில் ஷாருக்கானின் மகள் எப்படி இருக்கிறார் பாருங்க, இப்போ வாரிசு நடிகையாக மாறியதும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என நெட்டிசன்கள் அவரது போட்டோவை கம்பேர் பண்ணி வருகின்றனர்.
போனி கபூர் பொண்ணு: தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் சின்ன வயசில் நல்லா பப்ளியாக சுட்டிக் குழந்தையாக இருந்து வந்த நிலையில், சினிமாவில் என்ட்ரி கொடுத்ததும் கவர்ச்சி கன்னியாகவே மாறி விட்டார் என அவரது போட்டோவையும் ஷேர் செய்து ஓட்டி வருகின்றனர்.

ஜான்வி கபூர் தங்கச்சி: ஜான்வி கபூரை தொடர்ந்து அவரது தங்கச்சி குஷி கபூரும் தி ஆர்ச்சீஸ் தொடர் மூலமாக சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அவர் சிறு வயதில் கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க, இப்போ அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ரெடியாகி வந்து இன்ஸ்டாகிராம் உலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டார் என புலம்பல் அதிகரித்துள்ளன.

சைஃப் அலி கான் மகள்: ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடித்த பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஹீரோயின் ஆவதற்கு முன்பு வரை கொழு கொழுவென பப்ளி மாஸ் போல இருந்து வந்த நிலையில், ஹீரோயின் ஆவதற்காக ஏகப்பட்ட வேலைப்பாடுகள் செய்து இப்படி மாறி உள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.

தனுஷுக்கு ஜோடியாக அட்ரங்கி ரே படத்திலும் சாரா அலி கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலியா பட்: இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட் என்பது அனைவரும் அறிந்தது தான். வாரிசு நடிகையாக ஆலியா பட் என்ட்ரி கொடுத்த பின்னர் ஏகப்பட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் ஆள் அட்ரஸே காணாமல் போய் விட்டதாக பல சர்ச்சைகள் வெடித்தன.

தனது தேர்ந்த நடிப்பால், ஆலியா பட் பாலிவுட்டின் அசைக்க முடியாத முன்னணி நடிகையாக மாறி உள்ளார். இவரை போலவே அனன்யா பாண்டே, ஆல்யா காஷ்யப் உள்ளிட்டவர்களும் சிறு வயதில் இருந்த தோற்றத்தில் இருந்து ஹீரோயினாக மாறிய பின்னர் சூப்பராக மாறிவிட்டதாக போட்டோக்கள் வலம் வருகின்றன.