மானுடம் போற்றும் படைப்பாக்கியவர்: வடிவேலுவை கொண்டாடும் 'மாமன்னன்' படக்குழு.!

கடந்த வாரம் வெளியான ‘மாமன்னன்’ படம் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் நடிப்பில் பக்ரீத் வெளியீடாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படக்குழுவினர் வடிவேலு வீட்டிற்கே சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள போட்டோஸ் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழும் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் ‘மாமன்னன்’ படம் வெளியாகி வடிவேலுவிற்கு ஒரு தரமான கம்பேக்காக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் டைட்டில் ரோலிலே நடித்துள்ள வடிவேலு, அழுத்தமான நடிப்பை வழங்கி பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அரசியல்வாதியாக பதவியில் இருந்தாலும் சொந்தக்கட்சி ஆட்களாலே சாதிரீதியாக ஒடுக்கப்படுபவராகவும், ஒருக்கட்டத்தில் தனது மகனுடன் சேர்ந்து தனக்கான சுயமரியாதைக்காகவும், உரிமைக்காகவும் போராடுபவராக ‘மாமன்னன்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் வடிவேலு. மேலும் மொத்த படத்தையும் தோள் மேல் சுமந்து படத்தின் வெற்றிக்கு வடிவேலு பெரும் பங்காற்றியுள்ளதாக அனைவரும் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து வடிவேலுவை அவரது வீட்டிலே சந்தித்து மாலை அணுவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். இது தொடர்பாக
உதயநிதி ஸ்டாலின்
தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவை சந்தித்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து, ‘தன எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் ‘மாமன்னன்’ படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலுவை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்’ என பதிவிட்டுள்ளார்.

Jailer: ‘ஜெயிலர்’ படத்திற்காக வேறலெவல் பிளான்: மாஸ் காட்ட போகும் தலைவர்.!

இந்நிகழ்வில் இயக்குனர் மாரி செல்வராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பக மூர்த்தி ஆகியோர் உடனிருந்து வடிவேலுவிற்கு பூங்கொத்து வழங்கி, மாலை அணுவித்து வாழ்த்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு உதயநிதியின் கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக மாஸ் காட்டி வருகிறது ‘மாமன்னன்’. மேலும் தனது கடைசி படம் இவ்வாறு அமைத்துள்ளதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Rajinikanth:மாமன்னனுக்காக நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி: திக்குமுக்காடிய மாரி செல்வராஜ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.