சென்னை: யூடியூபர் டிடிஎஃப் வாசன் கார் பைக்கின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில். இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த வாசன் பைக்கில் பயணம் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு யூடியூபில் பிரபலமானார். இவருக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
பிரபலமானாலே பிரச்சனைகள் தானாக தேடி வரும் என்பார்கள். அதுபோலத்தான் டிடிஎஃப் வாசனுக்கு பிரச்சனை டிசைன் டிசைனா வரும்.
டிடிஎஃப் வாசன்: என்ன சாமி… சொல்லுங்க சாமி…சொல்லுங்க தங்கம்… என்று டிடிஎஃப் வாசன் தனது ரசிகர்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசினாலும் சோஷியல் மீடியாவில் அவரை ஒரு கூட்டம் வெச்சி செய்து தான் வருகிறது. கடந்த ஆண்டு பிறந்த நாளில் மீட்-அப் ஒன்னை வைத்து அதில் வசமாக சிக்கிக் கொண்டார் வாசன். அதன்பின் டிடிஎஃப் வாசன் எது செய்தாலும், சர்ச்சையாகவே மாறியது.
கார் விபத்து: நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று காலை டிடிஎஃப் வாசன் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பிரிட்ஜ் மீது மோதி,பின் அருகில் இருந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதனால் காரின் முன்பக்கம் சேதடைந்துள்ளது.

வாக்கு வாதம்: இதனால், டிடிஎஃப் வாசன் மற்றும் உடன் இருந்த நண்பர்கள் காரை விட்டு இறங்கி, ஆட்டோ பிடித்து விபத்து நடந்த இடத்திலிருந்து வேக வேகமாக கிளப்பினர். அப்போது ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அவரிடம் டிடிஎஃப் வாசன் எதுக்கு வீடியோ எடுக்குறீங்க என்றும், இங்கே என்ன நடந்தது என்று தெரியுமா என வாக்குவாதம் செய்தார்.
2 பிரிவுகளின் கீழ் வழக்கு: இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்த விபத்தை ஏற்படுத்தியது மஞ்சள் வீரன் இயக்குநர் செந்தில் செல் அம் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிவேகமாக வானத்தை ஓட்டுதல், அபாயகரமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் இயக்குநர் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் வண்டி ஓட்டினால்தான் பிரச்சனை என்று பார்த்தால்,