சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்கள் அனைவர்களுக்கும் வனிதா விஜயகுமார் நன்கு பரிட்சயம். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்தில் இவரை வெறுத்தவர்களை கூட தனது அதிரடி நடவடிக்கையால் கவர்ந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது சின்னத்திரை மற்றும் படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
வனிதா விஜயகுமார் தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை நேர்காணல் செய்வது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அத்துடன் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மானுடம் போற்றும் படைப்பாக்கியவர்: வடிவேலுவை கொண்டாடும் ‘மாமன்னன்’ படக்குழு.!
அதில், வனிதா விஜயகுமார் தனது அம்மா நடிகை மஞ்சுளாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் உன்னை பற்றி நினைப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளேன். அதனை உன்னை போலவே நானும் செய்து கொண்டிருக்கிறேன்.
View this post on InstagramA post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)
என்னுடைய ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர், எனது வீடு உள்ளிட்ட என்னை சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை ஒருநாள் மீண்டும் சந்திக்கிறேன். அதுவரையில் எனது அன்பு என உருக்கமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். வனிதா விஜயகுமாரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Jailer: ‘ஜெயிலர்’ படத்திற்காக வேறலெவல் பிளான்: மாஸ் காட்ட போகும் தலைவர்.!