சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடகர்கள் பாடும் போது வித்தியாசமான டிஜே மியூசிக் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த டிஜே பிளாக் ஹாலிவுட் சென்றதாக போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 9 பாடகி பூஜாவுக்கும் டிஜே பிளாக்குக்கும் பக்காவாக கெமிஸ்ட்ரி அந்த நிகழ்ச்சியில் வொர்க்கவுட் ஆனது.
பாடகி பூஜாவுக்கு மட்டும் பிரத்யேகமாக டிஜே மியூசிக் போட்டு வந்த டிஜே பிளாக் குறித்த மீம்களும் ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின.
டிஜே பிளாக்: சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிஜே மியூசிக்குகளை போட்டு அந்த ஷோவையே இந்த சீசனில் கலகலப்பாக மாற்றி இருந்தார் டிஜே பிளாக்.
வெறும் பாடகர்கள் பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும் என நினைத்த விஜய் டிவி பிரியங்கா, மாகாபா ஆனந்த் ஆங்கரிங் மற்றும் கூடுதலாக டிஜே பிளாக்கின் போர்ஷனையும் வைத்து இந்த சீசனை ஹிட் அடித்தது.

கலிபோர்னியாவில் சந்தானத்துடன்: விஜே மணிமேகலை, கேபிஒய் பாலா எல்லாம் சமீபத்தில் அமெரிக்காவுக்கு கச்சேரி ஒன்றுக்காக சென்ற நிலையில், டிஜே பிளாக்கும் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கே கலிபோர்னியாவில் நடிகர் சந்தானத்துடன் டிஜே பிளாக் எடுத்துக் கொண்ட அட்டகாசமான போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஹாலிவுட்டில் டிஜே பிளாக்: மேலும், அமெரிக்கா சென்ற டிஜே பிளாக் அங்கே ஹாலிவுட்டுக்கும் சென்று அந்த மலைக்கு அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
“ஆல் தி வே டு ஹாலிவுட்” என்றும் டிஜே பிளாக் அந்த போட்டோ போஸ்ட்டுக்கு கேப்ஷன் போட்டுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே ஹாலிவுட் படங்களிலும் நீங்கள் பணியாற்றுவீர்கள் ப்ரோ, அந்த அளவுக்கு உங்களுக்கு திறமை இருக்கு கலக்குங்க என டிஜே பிளாக் ரசிகர்கள் அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளனர். சமீபத்தில் சொந்தமாக டிஜே பிளாக் கார் வாங்கிய வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.