வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சோனிபட்: சிம்லா செல்லும் வழியில் காரை நிறுத்தி வயலில் இறங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடி காங்., முன்னாள் தலைவர் ராகுல் நெல் நாற்றுகளை நட்டார்.

அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இறங்கிய ராகுல் வயல்வெளிக்குள் சென்றார். தனது முழுக்கால் பேண்டை முட்டு வரை மடித்து விட்டு விவசாயிகளுடன் பேசினார். ராகுல் வருகையை எதிர்பாராத விவசாயிகள் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து நாற்று நட்டதுடன் , டிராக்டரில் விவசாயிகளை ஏற்றி ஓட்டி பார்த்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் இருந்து விடைபெற்று பயணத்தை தொடர்ந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement