ஜெனீவாவில் நடைபெற்ற உலகின் முதல் மனித-ரோபோ மாநாடு | ரிஷி சுனக்கை சந்தித்த ஜோ பைடன் – உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 86 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 151 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உலகின் முதல் மனித-ரோபோ மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது, அங்குச் செயற்கை நுண்ணறிவு கொண்ட 9 மனித உருவ ரோபோக்களின் குழு மனிதர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.

ஜப்பானில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதிகன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கண்ணாடி போல மிளிரும் கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். பூமியிலிருந்து 260 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்தக் கோள், 80 சதவிகித ஒளியை பிரதிபலிக்கிறது.

விம்பிள்டன் நடுவர், சாம்பியன்ஷிப் போட்டியின்போது ரசிகர்கள் வழக்கமாகப் பருகும் ஷாம்பைனை (Champagne) பருகுவதற்கு எதிராக எச்சரித்திருக்கிறார். இந்த வீடியோ விம்பிள்டனின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

நேட்டோ மாநாட்டுக்கு முன்னர், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, அவரின் லண்டன் அலுவலகத்தில் சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

தேர்தலுக்குப் பின்னர், தான் அரசியலிலிருந்து விலகுவதாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்திருக்கிறார்.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்குப் பரிசோதனையின் போது பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் மருத்துவர் லார்ரி நஸ்ஸர், ஃப்ளோரிடா சிறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.

சி-என்என் Ex-CNN என்ற செய்தி நிறுவனத்தின் முன்னாள் பத்திரிகையாளர் சைமா மொஹ்சின், இஸ்ரேலில் செய்தி வெளியிடும்போது தனக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவர் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகள் சரிவர இயங்கவில்லை என மக்கள் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்த கேள்விக்கு மெட்டா நிறுவனம் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.