தகுதிச் சுற்றில் முதல் 11 இடங்களுக்குள் மூன்று இலங்கை வீரர்கள்

இவ்வருட இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான சிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் விளையாடிய வீரர்களில் சிறந்து விளங்கும் 11 வீரர்களில் இலங்கை அணியின் மூன்று வீரர்களை உள்ளடக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளின் வீரர்களில் 11 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டிகளில் 2 சதங்களுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த பெதும் நிஸ்ஸங்க, ஒரு இன்னிங்ஸில் 69.5 சராசரியாக 417 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 22 விக்கெட்டுகளுடன் 12.9 விக்கெட் சராசரியையும், மஹீஷ் தீக்ஷன் 21 விக்கெட்டுகளுடன் 12.23 விக்கெட் சராசரியையும் பேணி அந்த இடங்களை பெற்றுள்ளனர்.

தகுதிச் சுற்றுப் போட்டியில் இடம் பெற்ற அணி

பெதும் நிசங்க 417 ஓட்டங்கள் பெற்றுள்ளார்
விக்ரம்ஜித் சிங் (நெதர்லாந்து) – 326 ஓட்டங்கள் மற்றும் 6 விக்கெட்டுகள்
பிரெண்டன் மெக்முல்லன் (ஸ்காட்லாந்து) – 364 ஓட்டங்கள் மற்றும் 13 விக்கெட்டுகள்
சீன் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) – 600 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகள்
பாஸ் டி லீட் (நெதர்லாந்து) – 285 ஓட்டங்கள் மற்றும் 15 விக்கெட்டுகள்
சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) – 325 ஓட்டங்கள்
ஸ்காட் எட்வர்ட்ஸ் (நெதர்லாந்து) – 314 ஓட்டங்கள்
வனிந்து ஹசரங்க – 22 விக்கெட்டுகள்
மஹீஷ் தீக்ஷன – 21 விக்கெட்டுகள்
கிறிஸ் சோல் (ஸ்காட்லாந்து) – 11 விக்கெட்
ரிச்சர்ட் நகரவா (ஜிம்பாப்வே) – 14 விக்கெட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.