சென்னை: விஜய் டிவி பிரபலங்கள் வரிசையாக கார்களை வாங்கி அடுக்கி வரும் நிலையில், சுனிதாவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார்.
விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் தான் சுனிதா.
விஜய் டிவி சுனிதா: அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா, ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பின் இவர் ஒரு சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
த்ரி படத்தில்: அதற்கு பின் இவர் தனுஷ் நடித்த த்ரி திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சுனிதா படங்கள் மற்றும் சீரியல்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து படங்கள் இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
குக்வித் கோமாளி: இதுவரை குக் வித் கோமாளி 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசனிலும் கோமாளியாக கலக்கி வருகிறார். இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது. இதில், நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள்.
விலை உயர்ந்த கார்: நடிகை சுனிதா விலை உயர்ந்த Luxury Hybrid விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை 60 லட்சமாகும். விஜய் டிவி பிரபலங்கள் அடுத்தடுத்து சொகுசு கார் வாங்கி வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது சுனிதாவும் இணைந்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.