நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் தேவிபிரியா. இவர், ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்தார். ராசிபுரம் கடைவீதியில் ஜுவல்லரி வைத்துள்ள இவரின் கணவர் அருள்லால், தி.மு.க முன்னாள் கவுன்சிலர். தற்போது, தி.மு.க நகர துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில், கடன் பிரச்னையால் தி.மு.க கவுன்சிலர் தேவிபிரியா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் மோனிஷா மற்றும் கணவருடன் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேவிபிரியாவிற்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஒரு மகள் பெங்களூரில் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிநிலையில், கடந்த ஆறு மாதங்களாகவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமையில் தவித்து வந்ததாகவும், அதனால்தான் தேவிபிரியா குடும்பத்தோடு தற்கொலை செய்துண்டுள்ளார் என்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருபக்கம் கடன் பிரச்னை, மறுபக்கம் வியாபாரத்தில் நஷ்டம் என்று தவித்த தேவிபிரியாவும், அருள்லாலும் தற்கொலை செய்ய முடிவு செய்து, முதலில் தங்களது இளைய மகள் மோனிஷாக்கு விஷம் கொடுத்து படுக்க வைத்து விட்டு, கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்ததாக தெரிகிறது. அவர்களின் உடல்களை மீட்ட ராசிபுரம் காவல் நிலைய போலீஸார் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.