யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்… சாலைகளில் புகுந்த தண்ணீர்… முடங்கிய டெல்லி!

தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வைரமுத்துவை நேரில் வாழ்த்திய ஸ்டாலின்… பாஜகவும் திமுகவும் ஒண்ணுதான்… விளாசிய சின்மயி!

இதேபோல் பீகார், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யமுனை ஆற்றில் நேற்று நீர்மட்டம் 207.55 மீட்டர் உயரம் வரை இருந்தது. 1978 ஆம் ஆண்டு 207.49 மீட்டர் என்ற வரலாறு காணாத அளவில் இருந்த அபாய கட்ட அளவை தாண்டியது. யமுனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீர்மட்டம் மேலும் அதிகரித்தால் டெல்லியில் வெள்ள அபாயம் ஏற்படும் என கூறப்பட்டது.

பெங்களூரை அதிர வைத்த இரட்டை கொலை… சிக்கிய மாஸ்டர் மைண்ட்… விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

இந்நிலையில் இன்று காலை யமுனை ஆற்றின் நீர் மட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 208 மீட்டரை தாண்டியுள்ளது. அபாயக்கட்டத்தை விட 3 மீட்டர் அதிகமாகவே தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் செங்கோட்டை, காஷ்மீரி கேட், யமுனா பேங்க் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. எது சாலை, எது ஆறு என தெரியாத அளவுக்கு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

யமுனை கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

நாளை விண்ணில் பாயும் சந்திராயன்- 3… மினியேட்சர் மாடலுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு!

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அத்தியாவசியமான அரசு துறைகள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.