அஹமதாபாத்: ஐந்து வருசத்தில் என்னை இரண்டாவது முறையாக ஏமாற்றிவிட்டார் என்று காதலன் மீது டைவர்ஸ் ஆன காதலி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரை நிராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம், உங்கள் இருவருக்குமானது திருமணத்தை மீறி உறவு மட்டுமே இதன் விளைவுகள் நன்கு தெரியும் என்பதால் இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்தது.
குஜராம் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த மீனாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு திடீரென ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் மீனாவிடம் கூறி உள்ளார். இதையடுத்து மீனா கணவனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். ஆனால் சொன்னபடி மீனாவை அவர் திருமணம் செய்யவில்லை. இதையடுத்து அவர் தன்னை ஏமாற்றிய காதலன் மீது அந்த பெண் சூரத்தில் உள்ள மஹிதர்புரா காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்ட மே மாதம் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த இளைஞர் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்யுமாறு அந்த நபர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அப்போது அந்தப் பெண்ணும் புகாரை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்ததால், உயர்நீதிமன்றம் புகாரை தள்ளுபடி செய்தது. இதையடுதுது சூரத் போலீஸ் ஸ்டேசனில் போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பினார்.
ஆனால் அதே பெண் குஜராத் மாநிலம் அஹமதாபாத் போலீசில் மீண்டும் புகார் அளித்தார் . அந்த மனுவில் மீனா, தன்னை ஐந்து வருடத்தில் இரண்டாவதுமுறையாக பாலியல் ரீதியாக ஏமாற்றி உள்ளார. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி குஜராத் நீதிமன்றத்தில் மீனாவின் காதலன் வழக்கு போட்டார். இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகீதா கோபி முன்பு விசாரணைக்கு வந்தது போது. அப்போது மீனா தரப்பில் வாதிடுகையில், இந்த வழக்கின் விசாரணை கண்டிப்பாக நடைபெற வேண்டும். என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் முதல் புகாரை ரத்து செய்ய சம்மதித்தேன். ஆனால் திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறினார்.
மீனாவின் காதலன் தரப்பு வாதிடுகையில், நான் காதலித்த பெண் விவாகரத்து செய்துவிட்டார். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கைவிட்டுவிட்டார். ஆறு ஆண்டுகளாக ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே பாலியல் உறவைப் பகிர்ந்து கொண்டோம். பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளோம் கூறி அதற்கான ஆதாரங்களை குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தார்

இதையடுத்து தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி, அகமதாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கிலிருந்து மீனாவின் காதலரை விடுவித்தது. ஏமாற்ற வேண்டும் என்ற மனநிலையில் இந்த குற்றத்தை அவர் செய்ததாகக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த வழக்கு ஒருமித்த உடலுறவு வழக்கு. இந்த வழக்கில் திருமணமான ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான திருமணமான பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களது உறவு ஆறு ஆண்டுகள் நீடித்திருக்கிறது. அந்த பெண் தனது கணவரிடமிருந்து அதன் காரணமாக விவாகரத்து பெற்றார்.
உறவு தொடங்கிய போதே அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே திருமண செய்வதாக அவர் அளித்தாக கூறப்படும் உறுதிமொழிக்கு எந்த கேள்வியும் இல்லை . இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு இது ஒரு திருமணத்திற்குப் புறம்பான உறவு மட்டுமே, அதன் நன்மை தீமைகள் அந்த பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். எனவே அந்த இளைஞர் மீதான எப்ஐஆர் ரத்து செய்யப்படுகிறது. அந்த பெண்ணின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதன் காரணமாக காதலியை ஏமாற்றிய வழக்கில் இருந்து அந்த நபர் தப்பியுள்ளார்.