மயில்சாமியின் 2 மருமகள்களும் வீட்டை விட்டு சென்றுவிட்டார்களா?: உண்மை இதோ

தன் காமெடி மூலம் நம்மை எல்லாம் சிரிக்க வைத்த சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு அன்பு, யுவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்
இருவரும் தங்கள் அப்பா வழியில் படங்களில் நடித்து வருகிறார்கள். மகன்களுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார் மயில்சாமி.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மூத்த மகன் அன்புவுக்கு திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்தார் மயில்சாமி. ஆனால் எந்த இடத்திலும் தன் மூத்த மருமகளின் தந்தை யார் என்பதை வைத்து பெருமை பேசியது இல்லை.

இந்நிலையில் மயில்சாமி இறந்த பிறகு அன்பு மற்றும் யுவனின் மனைவிகளுக்கு இடையே தினமும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாகி இருவரும் தங்கள் கணவன்மார்களை பிரிந்து சென்றுவிட்டார்கள் என தகவல் வெளியானது.

மயில்சாமி இருந்தவரை நன்றாக இருந்த குடும்பம் அவர் இறந்த பிறகு இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் தான் அந்த பிரச்சனை தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

தங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஏன் தான் இப்படி மோசமாக பேசுகிறார்களோ என்றும் மயில்சாமியின் மகன் அன்பு தெரிவித்திருக்கிறார்.

தனக்கு நெருக்கமானவர்களை எல்லாம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறு கூறி வந்தார் மயில்சாமி. அதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என மயில்சாமி விரும்பினார்.

தன் கடைசி ஆசையை டிரம்ஸ் சிவமணியிடம் கூறினார். அதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சிவமணி. மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்திடம் கடைசி ஆசை பற்றி கேட்கப்பட்டது.

மயில்சாமியின் ஆசை குறித்த விபரங்களை கேட்டறிந்து கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பேன் என்றார். அதன்படி அண்மையில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரஜினி. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரஜினியை பாராட்டினார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றிய தலைவருக்கு நன்றி என ரசிகர்கள் தெரிவித்தனர்.

தீவிர சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று இரவு முழுக்க கோவிலில் இருந்தார். பக்திப் பாடல்கள் பாடவும் செய்தார். அதிகாலையில் தன் குடும்பத்தாரை வீட்டில் விட்டுவிட்டு அடுத்த சிவன் கோவிலுக்கு செல்ல கிளம்பிய மனிதர் இறந்துவிட்டார்.

Sridevi: ஒரே நேரத்தில் 4 பட ஷூட்டிங், நாலுக்கும் ஒரே ஹீரோ: விக்கை வைத்து படத்தை கண்டுபிடித்த ஸ்ரீதேவி

இரவு முழுக்க கோவிலில் மயில்சாமியை பார்த்த பக்தர்களோ, மறுநாள் காலை அவர் உயிருடன் இல்லை என்பதை நம்ப மறுத்தார்கள். மயில்சாமி கோவிலில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. அதை பார்த்து பார்த்து ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள்.

சிவபக்தர் சிவராத்திரி அன்று சிவனடி சேர்ந்துவிட்டார். இதுவும் கடவுளின் திட்டம் என மனதை தேற்றிக் கொண்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.