திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாதப்பிறப்பையொட்டி, பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பபடும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின்போதும் திறக்கப்பட்ட சில நாட்கள் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதுமட்டுமின்றி, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை […]
