சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை பெறுவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைம்தொகை திட்டம் செப்டம்பர் 15ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் […]
