ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019 காலகட்டத்தில் மெங்மெங் என்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். மாணவர்களை நிர்வகிப்பது தொடர்பாக அப்போது சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த வாங் யுன் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் சோடியம் நைட்ரேட் விஷத்தைக் கலந்து உள்ளார். மாணவர்கள் அந்த […]
