பிடிஆர்-ஐ புறக்கணிக்கிறாரா ஸ்டாலின்? பற்றி எரியும் திமுக உட்கட்சி பாலிடிக்ஸ்!

தமிழகத்தின் நிதியமைச்சராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறுகிய காலத்தில் தமிழகத்திலும், தேசிய அளவிலும் பிரபலமானார். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை அவ்வப்போது ஊடகங்களிலும் பொதுவெளியிலும் கேள்விக்குட்படுத்தி வந்தார். ஆனால் சமயங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு ஒன்றிரண்டு வார்த்தைகளைவிடுவது அவருக்கே பிரச்சினையாகி வந்தது.

பிடிஆர் ட்விட்டர் சர்ச்சைகள்!இதனால் சமூகவலைதளங்களில் யாருக்கும் உணர்ச்சிவசப்பட்டு பதிலளிக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினே அவரை அழைத்து பேசியதாக அப்போதே செய்திகள் வெளியாகின. திமுகவின் உட்கட்சியிலேயே அவருக்கு எதிராக பல கட்டங்களில் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் அப்போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அரணாகவே செயல்பட்டார்.
அண்ணாமலை வெளியிட்ட சர்ச்சை ஆடியோ!இவை அனைத்தும் அண்ணாமலை ஆடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்புவரை தான். சர்ச்சைக்குரிய அந்த ஆடியோவில் உதயநிதியும், சபரீசனும் முறைகேடான வழியில் 30, 000 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டதாக பிடிஆரின் குரலில் பேசப்பட்டிருந்தது. இது தன்னுடைய குரல் இல்லை என்று பிடிஆர் மறுப்பு தெரிவித்தார். ஸ்டாலினிடமும் நேரடியாக சென்று விளக்கம் அளித்தார்.
ஸ்டாலின் மீது மக்கள் அதிருப்திமுதல்வர் ஸ்டாலினும் மலிவு அரசியலுக்கு விளம்பரம் தேடித்தரவில்லை என்று கூறி அந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தார். ஆனால் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் தொழில் நுட்பத்துறைக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை கட்சி மீதும் ஆட்சி மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பிடிஆரை புறக்கணிக்கும் திமுக அமைச்சர்கள்!தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் கட்சியிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மதுரைக்கு செல்லும் பிற துறை அமைச்சர்களும் மூர்த்தியிடம் நெருங்கிப் பழகுவதும், பிடிஆரிடம் பட்டும் படாமல் சென்றுவிடுவதும் தொடர்ந்து வருகிறது.
மதுரை நிகழ்ச்சியை தவிர்த்த ஸ்டாலின்இவை ஒருபுறமிருக்க முதல்வர் ஸ்டாலின் இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க மதுரை வருகை தந்த போதும், தகவல் தொழில்நுட்பத்துறையின் நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொள்ளாமல் சென்னையில் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை கட்டிட திறப்பு விழாமதுரை எல்கோசெஸ்ஸில் அமைந்துள்ள பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸின் தகவல் தொழில் நுட்பத்துறை கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வுக்கு பிடிஆர் முன்னிலை வகித்துள்ளார். மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், பிடிஆரின் நிகழ்ச்சியை காணொலியில் கலந்துகொள்ளாமல் முன்கூட்டியே வந்து நேரடியாக கலந்துகொண்டிருக்கலாமே என்று கேள்விகள் எழுகின்றன.
ஸ்டாலின் இப்படி செய்யலாமா?​​
அண்ணாமலை கிளப்பி விட்ட ஆடியோ சர்ச்சை இன்னும் முடிவடையாததன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின், பிடிஆரின் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்று திமுகவுக்கு உள்ளேயே பேச்சுக்கள் எழுகின்றன. மதுரைக்கு வரும் திமுக அமைச்சர்கள் பிடிஆரை புறக்கணிக்கும் நிலையில் அதை தடுக்கும் விதமாக முதல்வர் செயலாற்றாமல், அதை ஆதரிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளாரே என விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.