சென்னை: மாவீரன் படத்திற்கு விஜய்சேதுபதி வாங்கிய சம்பளத்தை கேட்டு திரையுலகத்தினரே அசந்து போனார்கள்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெள்ளிக்கிழமை வெளியானது.
மாவீரன்: கார்ட்டூனிஸ்ட்டான சிவகார்த்திகேயன் தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்துக்கூட பேசதா பயந்தாங்கோலியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், அதன் பின் அங்கு நடக்கும் அடுத்தடுத்த சம்பங்களே மாவீரன் படத்தின் கதை.
ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமா: மடோன் அஸ்வினின் முந்தைய படமான மண்டேலா வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமா ஜானரில் முக்கியமான விஷயத்தை கதைக்களமாக கொண்டுள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு பைசாக்கூட வாங்கல: மாவீரன் படத்தில் சிறப்பு அம்சமாக நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் டக்கு டக்குனு வானத்தை பார்த்து விட்டு ருத்ர தாண்டவம் ஆடுவார். அது விஜய் சேதுபதியின் குரலை கேட்ட பிறகு தான். படத்திற்கு குரல் கொடுத்ததற்கு விஜய் சேதுபதி ஒரு பைசாக்கூட வாங்கிவில்லையாம், மனோன் அஸ்வினுடன் உள்ள நட்புக்காக இதை விஜய்சேதிபதியாக செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.