Maaveeran: மாவீரன் வெற்றியா ? தோல்வியா ? வெளியான ரிப்போர்ட்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் நேற்று திரையில் வெளியானது. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைந்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்யாசமாக நடித்துள்ளதாகவும், அவரின் நடிப்பில் வெளியான படங்களில் இருந்து மாவீரன் மாறுபட்டு இருக்கும் என்றும் தகவல்கள் வர இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

மாவீரன் வெற்றி

இந்நிலையில் இப்படம் நேற்று திரையில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளிவருகின்றது. என்னதான் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கும் அளவிற்கு படத்தின் முதல் பாதியும், படத்தின் கதைக்களமும் இருந்ததாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Maaveeran: மனைவி கொடுத்த அன்பு பரிசு..நெகிழ்ச்சியான சிவகார்த்திகேயன்..மாவீரன் ஸ்பெஷல்..!

குறிப்பாக மாவீரன் படத்தின் மூலம் வித்யாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்களால் பார்க்கமுடிந்தது எனலாம். இதுவரை கலகலவென சிரித்து பேசி நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் மிகவும் சீரியஸான ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் அவரின் கெட்டப்பும், உடல்மொழிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுதவிர படத்தில் யோகி பாபுவின் காமெடி வெறித்தனமாக இருக்கின்றது. யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இறுதியாக மிஸ்கினின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் எனலாம்.

வெளியான ரிப்போர்ட்

இந்நிலையில் பல சிறப்பம்சங்களை கொண்ட மாவீரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி வரை வசூலித்துள்ளதாம். 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் மாவீரன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ளதாலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

குறிப்பாக அடுத்த வாரமும் பெரிய படம் எதுவும் வெளியாகாததால் மாவீரன் படத்திற்கு அது சாதகமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.