சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் மாதம் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது ஜெயிலர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் பிரிவியூவை வெளியிட்ட படக்குழு: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
படம் சர்வதேச அளவில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் படத்தில் எந்த மாதிரியான கேரக்டர் அமைந்திருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
தமன்னா, ரஜினிகாந்த் நடனம் ஆடியிருந்த காவாலா என்ற பாடல் லிரிக் வீடியோவாக வெளியானது. இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ரஜினிக்கு மைல்டான ஸ்டெப்ஸ் மட்டுமே காணப்பட்டது. தன்னுடைய நடனத்தால் சர்வதேச அளவில் இந்தப் பாடலை ஹிட்டாக்கியுள்ளார் தமன்னா. பல பிரபங்கள், ரசிகர்கள் இந்தப் பாடலின் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அனிருத் இசையில் இந்தப் பாடல் அதிகமான வியூஸ்களை பெற்று வருகிறது.
படம் ரிலீசாக இன்னும் ஒருமாத காலம் கூட இல்லாத நிலையில், தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது ஜெயிலர் டீம். பாடலின் அடுத்த சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பாடலின் ப்ரிவியூ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஹுக்கும் என்றும் டைகர் கா ஹுக்கும் என்றும் ரஜினி கூறுவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து நான் தான் கிங், தான் வைத்ததுதான் ரூல்ஸ் என்று அவர் கூறுவதாகவும் அமைந்துள்ளது.
ரஜினியின் நிழல் உருவத்தையே இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் கூலர்ஸ் உள்ளிட்டவை சகிதம் அவர் வீடியோவில் மாஸ் காட்டுகிறார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் போல இல்லாமல் ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இசை வெளியீடு குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கலாம்.