"நான் ஒழுக்கம் கெட்டவளா..?" அமைச்சர் ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்

டெல்லி:
நடிகை சன்னி லியோன் குறித்து ஆந்திரா அமைச்சர் ரோஜா பேசியதும், அதற்கு சன்னி லியோன் கொடுத்த பதிலடியும்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதில் அமைச்சர் ரோஜாவை சன்னி லியோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள கட்சிகள் இப்போதே அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்களும் சூடிபிடித்து வருகின்றன. ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸையும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார். “பவன் கல்யாண் ஒரு நடிகர். அவ்வளவு தான். அவருக்கு கூட்டம் கூடுவதெல்லாம் அவரை பார்ப்பதற்காகதான். மற்றபடி அதெல்லாம் ஓட்டுகளாக மாறாது. இதை பவன் கல்யாண் முதலில் உணர வேண்டும். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் பாடம் எடுப்பதை பார்க்கும் போது, சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல உள்ளது” என்று பேசினார்.

10 ரூபாய் அதிகம் கேட்ட டாஸ்மாக் கடைக்காரர்.. புகார் அளித்தவரை அடித்த போலீஸ்காரர்.. தீயாக வந்த ‘ஆர்டர்’

ரோஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அரசியல் ரீதியாக எதிர்கருத்துகளை வைப்பதை விடுத்து, தேவையில்லாமல் ஒரு நடிகையை அவமானப்படுத்தும் விதமாக ரோஜா பேசியது தவறு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை சன்னி லியோன் தனது பக்கத்தில் ரோஜாவை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நான் ஆபாச நடிகை தான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒருபோதும் நான் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல இல்லாமல், நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாக செய்வேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் நீங்கள் அதில்தான் இருக்கிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.