போபால்: வந்தே பாரத் ரயிலில் இருந்து திடீரென புகை வந்த சம்பவம் பயணிகள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபாலில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில்தான் இப்படி தீ பிடித்து உள்ளது. ராணி கமலாபதி நிலையத்திலிருந்து புது டெல்லியில் உள்ள நிஜாமுதீன் நோக்கி ரயில் புறப்பட்டபோது இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
உள்ளே இருந்த பேட்டரி ஒன்று திடீரென தீ பிடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பெட்டி முழுக்க புகை மூட்டமாக மாறி உள்ளது.
உடனே ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பலருக்கு இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதோடு அங்கே இருந்த ஊழியர்கள் உடனே தீயை அணைத்ததால் ரயில் எரிந்து நாசமாகாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. . பலருக்கு இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது. சமீபத்தில் மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயிலில் சில நாட்களுக்கு முன்பு திடீரென மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளத.
தொழிற்சாலையின் பொது மேலாளர் உட்பட அதிகாரிகள் குழு மும்பைக்கு சென்று ரயிலில் சோதனை செய்து உள்ளனர். சரி செய்ய வேண்டிய குறைபாடுகளைக் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து ரயிலில் தண்ணீர் சேகரிக்கப்படும் பகுதிகளில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். மாற்றங்கள் செய்யப்பட்ட பின் வந்தே பாரத் ரயிலில் கசிவு இருக்காது என்று கூறப்படுகிறது.
தரம் குறைகிறது: வந்தே பாரத் ரயிலில் தரம் குறைந்து கொண்டே வருவதாக புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் மும்பை – கோவா வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை என்று மக்கள் இடையே புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வந்தே பாரத் ரயில்களில் மிக மோசமான உணவுகள் வழங்கப்படுகின்றன. காய்ந்து போன சப்பாத்தி, கடுமையாக இருக்கும் பன்னீர் வழங்கப்படுகின்றன என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதிலும் எல்லா ரூட்டிலும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவில் கலாச்சாரத்திற்கு, மாநிலத்திற்கு தகுந்தபடி எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்றும் புகார் வைக்கப்படுகிறது. அதோடு வந்தே பாரத் தொடங்கிய நாளில் நல்ல பேக்கிங்கில் கொடுக்கப்பட்ட உணவுகள் தற்போது மோசமான அட்டைகளில் கொடுக்கப்படுகின்றன, என்றும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து வந்தே பாரத் தொடங்கிய நாளில் நல்ல பேக்கிங்கில் கொடுக்கப்பட்ட உணவுகள் இப்போது மிக மோசமான பேக்கிங்கில் கொடுக்கப்படுகிறது என்று புகார் கூறி உள்ளார். இதற்கு இடையே மும்பை – கோவா வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி உள்ளே கேட்டரிங்கில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை சாப்பிட திறந்த பயணி அதன் உள்ளே நகம் இருந்ததை பார்த்துள்ளார். அழுக்கு படிந்த, மோசமான நிலையில் நகம் ஒன்று உணவில் கிடந்துள்ளது. இதை அப்படியே பேக் செய்து.. நல்லா சாப்பிடுங்க என்று கொடுத்துள்ளனர் நிர்வாகத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அவர் ரயில்வே நிர்வாகத்திடம் புகாரும் அளித்தார்.
இந்த சம்பவம் தற்போது இணையம் முழுக்க கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதையடுத்து சிஎஸ்எம்டி-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பொறுப்பின்றி நடந்து கொண்டதற்காக அபராதம் விதித்து உள்ளது. அது மட்டுமின்றி இது தொடர்பாக விரைவில் விசாரணை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதையடுத்து உணவு வழங்குதல், தயாரிப்பதில் பல கட்டுப்பாடு நடவடிக்கைகள், விதிமுறைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.