\"காசு இல்லைங்க..\" வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி மிக மோசமாக இருக்கும் சூழலில், நிலைமையைச் சமாளிக்க ஏர்போர்ட்களை அவுட்சோர்ஸிங் செய்ய பாக். அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார சிக்கலில் தவிர்த்தது வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சிக்கல் இருந்தாலும் கடந்த சில மாதங்களில் நிலைமை ரொம்பவே மோசமடைந்தது.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பாகிஸ்தானைப் புரட்டிப் போட்டது. இதனால் நிலைமையைச் சமாளிக்க அவர்கள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஏன் சர்வதேச நாணய நிதியம் ஆகியோரிடம் பல பில்லியன் டாலர் கடன் வாங்கினர்.

வாடகைக்கு விடும் பாகிஸ்தான்: இருப்பினும், நிலைமை சரியாகவில்லை. பெட்ரோல், கோதுமை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. அங்கே அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க அங்குள்ள முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளை அவுட்சோர்சிங் செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங்கிற்கு விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை அவுட்சோர்சிங் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கப் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவுட்சோர்ஸிங் செய்யப்படுவது என்பது வழக்கமான நடைமுறை தான். ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலையங்கள் அவுட் சோஸ்சிங் தான் செய்யப்பட்டிருக்கும். ஆனால், பாகிஸ்தானில் இத்தனை காலம் பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி அரசே முழுமையாக ஏர்போர்ட்களை கன்டிரோல் செய்து வந்தது. இப்போது நிதிநிலை மோசமாகி இருப்பதால் அந்நிய செலாவணி தேவை என்பதாலேயே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக். நிதியமைச்சர்: இது தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட கூட்டத்தையும் அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தார் நடத்தியுள்ளார். நாட்டின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், ஏர்போர்ட்களை அவுட்சோர்சிங் செய்வ முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அமைச்சர் அதில் வலியுறுத்தியுள்ளார். இதற்காக விமானப் போக்குவரத்துச் சட்டங்களில் மாற்றம் செய்து இம்மாத இறுதிக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது

கடந்த மார்ச் 31ஆம் தேதி கூடிய பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி விமான நிலையங்களில் செயல்பாடுகள் மற்றும் நிலப்பயன்பாடுகளை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்ய முடிவெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி மிக மோசமாக இருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல், மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதிலும் கூட அந்நாட்டிற்குச் சிக்கல் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இப்போது ஏர்போர்டகளை அவுட்சோர்ஸ் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

 Due To Forex Crisis Pakistan is Forced To Outsource its Airports

என்ன முடிவு: முதற்கட்டமாக இஸ்லாமாபாத் விமான நிலையம் அவுட்சோர்ஸிங் செய்யப்படுவது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அடுத்து வரும் காலத்தில் மெல்ல நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய விமான நிலையங்களையும் அவுட்சோர்ஸிங் செய்யப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

நிதிநிலை இந்தளவுக்கு மோசமாக இருக்கும் சூழலில், இந்தியாவுடன் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதில் போட்டிப் போட்டு வருகிறது. வரும் சுதந்திர தினத்தில் அட்டாரி எல்லையில் இந்தியா 413 அடி உயரக் கொடியை ஏற்ற திட்டமிட்டுள்ளது. அதற்குப் போட்டியாகப் பாகிஸ்தான் 500 அடி கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளது. நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், இந்த ஒரு கொடிக்காகப் பாகிஸ்தான் பல கோடி ரூபாயையும் செலவிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.