Saritha: கே.பாலச்சந்தரையே வியக்க வைத்த சரிதாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா ? மாவீரன் நடிகையின் மறுபக்கம்..!

80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் சரிதா. பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீடு பெண் போல இருக்கும் சரிதா தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் தன்வசப்படுத்தினார்.

என்னதான் இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமானாலும் தமிழில் 1978 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான தப்பு தளங்கள் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையாக மாறினார் சரிதா. அதைத்தொடர்ந்து வண்டிச்சக்கரம், நெற்றிக்கண், அக்னி சிறகுகள் என பல படங்களில் நடித்த சரிதா ரஜினி மற்றும் கமலுக்கே நடிப்பில் சவால் விட்டுள்ளார்.

சரிதாவின் சோகங்கள்

ஹீரோக்களுடன் போட்டிபோட்டு நடித்த சரிதாவை பார்த்து இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களே வியந்துள்ளாராம். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் பல படங்களில் நடித்த நாயகி என்ற பெருமை சரிதாவை சேரும். எந்த ஒரு கஷ்டமான சீனாக இருந்தாலும் அசால்டாக எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நடித்துக்கொடுக்கும் சரிதாவை பார்த்து மனதார பலமுறை பாராட்டியுள்ளார் கே.பாலச்சந்தர்.

Maaveeran: மோசமான விமர்சனங்களால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்..!

இந்நிலையில் திரைவாழ்க்கையில் ஜொலித்த சரிதாவின் சொந்த வாழ்க்கையில் அவர் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். சிறுவயது முதல் பல கஷ்டங்களை சந்தித்து வந்த சரிதா 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரிதா மற்றும் முகேஷ் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் விவாகரத்து பெற்றதும் மனமுடைந்த சரிதா சினிமாவில் இருந்து விலகினார். கடந்த 23 ஆண்டுகளில் சரிதா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சரிதா சிறுவயது முதல் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

மீண்டு வந்த நாயகி

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கஷ்டப்பட்டு முயற்சி செய்து ஒரு நடிகையாக வலம் வந்த சரிதாவின் சொந்த வாழ்க்கை அவர் நினைத்தது போல அமையவில்லை. பல சோகங்கள் மற்றும் கஷ்டங்களை கடந்து வந்த சரிதா தற்போது மாவீரன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

கடந்த வாரம் வெளியான மாவீரன் படத்தில் மீண்டும் ஒருமுறை தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் சரிதா. பல வருடங்கள் கழித்து சரிதாவை திரையில் பார்த்த 80 காலகட்ட சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவ்வளவு எளிதில் அவர்களால் சரிதாவை மறக்கமுடியாது. எனவே மீண்டும் சரிதா பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.