பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது […]
