பழநி முருகனை தரிசித்த துர்கா ஸ்டாலின்| பட்டினம்பாக்கத்தில் உள்வாங்கிய கடல் | News In Photos

விழுப்புரம்:

மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திருவிழா விமர்சையாக நடந்தது.

நீலகிரி:

ஊட்டி ஹெச்.பி.எஃப் பகுதியில் புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலியான நிலையில், வனத்துறையினர் நிகழ்விடத்தை ஆய்வுசெய்தனர்.

ராமநாதபுரம்:

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

புதுச்சேரி:

அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க-வினர் சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம், குபேர் அங்காடி உள்ளிட்ட பணிகள் குறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது.

கோவை:

தமிழ்நாடு தினமான இன்று, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர்.

கடலூர்:

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை குறித்த நான்கு நாள்கள் புகைப்படக் கண்காட்சி டவுன்ஹாலில் இன்று தொடங்கியது.

நீலகிரி: ஊட்டி, புதுமந்து பகுதியில் முட்டைகோஸ் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள்.
கடலூர்:

பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

புதுச்சேரி:

நெல்லித்தோப்பு பகுதியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசு இடத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கு, குடியிருப்பு மனைப் பட்டாவை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் பழநியில் கறுப்புச்சட்டை அணிந்து, கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுச்சேரி:

சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் செயல்பாட்டுக் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.

சேலம்:

தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் மாநகராட்சி மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் பேரணியாகச் சென்றனர்.

பெங்களூரூ:

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு.

விருதுநகர்:

தேசபந்தம் மைதானத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

விருதுநகர்: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர்:

தமிழ்நாடு என பெயர் வரக் காரணமான தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் மற்றும் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நீலகிரி:

தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்.

மதுரை:

அழகர் கோயில் 18-ம் படி கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது.

சென்னை:

பெருநகரக் காவல், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

திண்டுக்கல்:

பழநி முருகன் கோயிலில் தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி:

புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

வேலூர்:

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடும் வகையில், மாணவ மாணவிகள் பேரணி நடந்தது.

புதுச்சேரி:

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாளையொட்டி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.

வேலூர்:

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் அடிப்படை வசதி வேண்டி, அந்தக் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலி:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில், மாணவ மாணவியர்க்கு பட்டங்களை வழங்கினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி.

சென்னை:

பட்டினம்பாக்கத்தில் கடல் உள்வாங்கியது.

ஈரோடு:

தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

ராமநாதபுரம்:

பென்ஷன் வழங்கக் கோரி அனைத்து ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி:

பெங்களூரூவில் நடைபெற்ற
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து
பா.ஜ.க., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கறுப்பு பட்டை அணிந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கன்னியாகுமரி:

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறி, டிரைவர் பேருந்தை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.