புகழஞ்சலி | “மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டி” – நடிகர் கமல்ஹாசன் 

சென்னை: “உம்மன் சாண்டியின் மறைவு நாட்டுக்கும், கேரளத்துக்கும் பேரிழப்பு” என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டுக்கும், கேரளத்துக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உம்மன் சாண்டி: கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி. புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று பெங்களூருவில் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதுபாலியில் உள்ள தேவாலயத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.