சதுரகிரி சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷ பூஜையை முன்னிட்டு ஜூலை 15 முதல் 18 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிகப்ப்பட்டனர். நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் இங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது. காட்டுத் தீ மிகவும் கடுமையாக இருந்ததால் பக்தர்களைக் கோவிலை விட்டு இறங்க வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. […]