சென்னை: நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.
தொடர்ந்து விஜய், விக்ரம், உதயநிதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ள எமி ஜாக்சன், தொடர்ந்து அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மகன், காதலருடன் நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட எமி ஜாக்சன்: நடிகை எமி ஜாக்சன் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டிணம் என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆர்யா நடித்திருந்தார். பீரியட் படமாக வெளியான இந்தப் படம் எமி ஜாக்சனுக்கு மிகச்சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது.

லண்டனை சேர்ந்த மாடல் அழகியான எமியை தமிழில் நடிக்க வைக்க அழைத்து வந்தார் ஏஎல் விஜய். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களிலும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் யவடு, கன்னடத்தில் தி வில்லன் இந்தியில் ஏக் தீவானா தா போன்ற படங்களின்மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
தமிழில் தாண்டவம், தெறி, 2.ஓ, கெத்து என அடுத்தடுத்த ஹிட் கொடுத்த எமி ஜாக்சன், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அவருக்கு குழந்தை பிறந்ததும் இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை தமிழில் கொடுத்துள்ளார் எமி. மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்திலேயே தன்னுடைய ரீஎன்ட்ரியை அருண் விஜய்யுடன் துவங்கியுள்ளார்.

மிஷன் சேப்டர் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் எமி ஜாக்சனுக்கு மீண்டும் வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கலாம்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் எமி ஜாக்சன். தன்னுடைய புதிய காதலர் மற்றும் மகனுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் தன்னுடைய மகன் மற்றும் காதலருடன் சுற்றுலாவில் உள்ள எமி, அவர்களுடன் உல்லாசமாக பொழுதை போக்கி வருவதை இந்தப் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.