Maaveeran Collection:ரிலீஸான நாலே நாளில் ரூ. 50 கோடி வசூலித்த மாவீரன்: சிவா சொன்னது நடந்துடுச்சு

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த மாவீரன் படம் ஜூன் 14ம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாளில் இருந்து மாவீரன் ஓடும் தியேட்டர்களில் கூட்டமாக உள்ளது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் மாவீரன் படம் ரிலீஸான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நேற்று மாவீரன் படத்தின் வசூல் சற்றே குறைந்துவிட்டது. இருப்பினும் வார இறுதி நாட்களில் மாவீரனின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரனுக்கு தற்போதைக்கு டஃப் கொடுப்பது டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 படம் தான். மாவீரன் படத்தை தெலுங்கில் மாவீருடு என்கிற பெயரில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

மாவீரனும், மாவீருடுவும் சேர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். மாவீரன் படத்தை ரூ. 35 கோடி செலவில் எடுத்தார்கள். இந்நிலையில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ. 50 கோடி வந்துவிட்டது.

Maaveeran Collection: வசூல் வேட்டை நடத்தும் மாவீரன்: நேற்று மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

தன் முந்தைய படம் மிஸ்ஸாகிவிட்டது என்றும், மாவீரன் மிஸ்ஸாகவே ஆகாது என்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அவர் ஏன் அப்படி நம்பிக்கையுடன் கூறினார் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அவர் சொன்னது போன்று மாவீரன் மிஸ்ஸாகவில்லை.

முன்னதாக மாவீரன் படம் ரிலீஸான அன்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சிவகார்த்திகேயன். சென்னையில் உள்ள ரோஹினி மற்றும் காசி தியேட்டர்களுக்கு சென்றார்.

மேலும் மாவீரனுக்கு தளபதி விஜய்யின் ஆசி கிடைத்துவிட்டது. விஜய் தன் சார்பில் மனைவி சங்கீதாவை தியேட்டருக்கு அனுப்பி வைத்தார். மாவீரன் படம் ஓடிய தியேட்டரில் சங்கீதா விஜய்யை பார்த்த சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மகிழ்ச்சி அடைந்தார்.

சங்கீதாவும், ஆர்த்தியும் கையை பிடித்துக் கொண்டு சிரித்தபடி பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. படம் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் ஆர்த்தியிடம் பேசினாராம் சங்கீதா.

வெகுநாட்கள் கழித்து சங்கீதாவை நேரில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இத்தனை நாட்களாக உங்களை பார்க்கவே முடியலயே அண்ணி என்றார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு பட வசூலை மாவீரன் முந்திவிட்டதாக தகவல் வெளியானது. வாரிசு படம் ரிலீஸான இரண்டாம் நாள் அமெரிக்காவில் மட்டும். ரூ. 4 கோடி வசூல் செய்தது. ஆனால் மாவீரனோ இரண்டாம் நாள் ரூ. 5 கோடி வசூலித்திருக்கிறது.

Maaveeran Review:மாவீரன் படம் எப்படி?: முதல் ஆளாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

முன்னதாக மாவீரனை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அது அருமையாக இருப்பதாக ட்வீட் செய்தார். அதை பார்த்த ரசிகர்களோ, உதயநிதியே சொல்லிவிட்டார், மாவீரன் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என்றார்கள்.

இந்நிலையில் மாவீரன் வசூல் மன்னனாக மாறியிருப்பதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்களோ, முதல் ஆளாக மாவீரனை பற்றி நல்லவிதமாக விமர்சித்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மாவீரன் ரிலீஸான கையோடு எஸ்.கே. 21 படத்தில் நடிக்க காஷ்மீருக்கு சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.