அமலா சாஜிக்கே செம டஃப்.. காவாலா பாட்டுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்டது யாருன்னு பாருங்க!

சென்னை: நடிகை தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு சமீப காலமாக கிளாமரில் எல்லை மீறி வரும் நிலையில், அவரை விட ஹாட்டாக தெரிந்தால் தான் இணையத்தில் டிரெண்டாக முடியும் என இளம் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர்ச்சியில் காவாலா பாட்டுக்கு ஆட்டம் போட்டு வருகின்றனர்.

அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடல் விஜய் ரசிகர்களுக்கான பதிலடி பாடலாக அமைந்துள்ளது என கூறப்பட்டாலும், பேட்ட பராக் பாடல் அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை.

ஆனால், முதல் சிங்கிளாக வெளியான காவாலா பாட்டுக்கு இன்னமும் பல நடிகைகள் ஆடைகளை எந்தளவுக்கு குறைத்துக் கொண்டு ஆட்டம் போட முடியுமோ அந்த அளவுக்கு ஆட்டம் போட்டு வருகின்றனர்.

50 மில்லியன் வியூஸ்: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் தமன்னாவின் தாறுமாறு ஆட்டத்திற்காகவே 50 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டாகி வருகிறது. கூடிய விரைவிலேயே 100 மில்லியன் வியூஸை அந்த பாடல் அதிரடியாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னாவின் குத்தாட்ட பாடலுக்கு பல இளம் நடிகைகள் சென்னை முதல் குஜராத் வரை ஆட்டம் போட்டு அந்த பாடலை வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அமலா ஷாஜி ஆட்டம்: இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள அமலா ஷாஜி சமீபத்தில் அப்படியே தமன்னா போலவே முடியை எல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போட்ட ஆட்டத்துக்கு 5 லட்சத்துக்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.

பாவனா பாலகிருஷ்ணன், பிக் பாஸ் சம்யுக்தா இணைந்து அந்த பாட்டுக்கு போட்ட டான்ஸும், அர்ச்சனாவின் மகள் சித்தியுடன் போட்ட ஆட்டம், இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ரூத் என பலரும் ஜெயிலர் பட பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸா போட்டுத் தள்ளுறாங்க..

சூர்யா பிரபா குலுக்கல் குத்தாட்டம்: மன்சூர் அலி கானின் சரக்கு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள இளம் நடிகை சூர்யா பிரபாவும் தற்போது ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு குலுக்கல் குத்தாட்டம் ஒன்றை போட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.

உள்ளாடை ஏதும் அணியாமல் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் குட்டை ஜீன்ஸ் அணிந்து கொண்டு காவாலா பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு இளம் ரசிகர்களை இம்சை செய்து வருகிறார். இன்னும் யாரெல்லாம் இப்படி தமன்னாவை விட தாறுமாறாக ஆடப் போறாங்களோ அந்த பாட்டுக்கு என்றே தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.