ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இலங்கை அணி நாடுதிரும்பல்

தாய்லாந் பெங்கொங்கில் திங்கட்கிழமை (17) மாலை நடந்து முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி சாதனை படைத்த 8 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 13 வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

62 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ தடகளப் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, கமாண்டோ பிரிகேட் தளபதியும் இலங்கை இராணுவ தடகளப் குழுவின் பிரதித் தலைவருமான பிரிகேடியர் வீஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்ஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இராணுவ விளையாட்டு வீரர்களை வரவேற்க அங்கு கூடியிருந்தனர்.

ஜூலை 12 முதல் 16 வரை தாய்லாந்தின் பெங்கொங் சுபச்சலசாய் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக அனைத்து சாம்பியன்ஷிப் பட்டியலிலும் நான்காவது இடத்தைப் பிடித்தது.

சம்பியன்ஷிப் போட்டியின் போது, இலங்கை வீராங்கனைகள் மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதுடன், அவர்களில் இராணுவ வீரர்கள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வருடங்களின் பின்னர் இலங்கை தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. அவர்களின் சாதனைகள் புதிய ஆசிய தடகள சாம்பியன்ஷிபில் இலங்கையின் சாதனைகளை உருவாக்கியது.

இராணுவத்தின் பங்கேற்பாளர்கள் பின்வருமாறு:

சார்ஜென்ட் எச்கேகே குமாரகே இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

பொம்பார்டியர் எஸ்ஏ தர்ஷன இலங்கை இராணுவ பீரங்கி படையணி

கோப்ரல் என் ராமநாயக்க இலங்கை இராணுவ மகளிர் படையணி

கோப்ரல் எச்எல்என்டி லேகம்கே இலங்கை இராணுவ மகளிர் படையணி

லான்ஸ் பொம்பார்டியர் பீஎம்பீஎல் கொடிகார இலங்கை இராணுவ பீரங்கி படையணி

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஆர்என் ராஜகருணா இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

கன்னர் ஜிடிகேகே நிகு இலங்கை இராணுவ பீரங்கி படையணி

பெண் சிப்பாய் வீஆர்எச் குரே இலங்கை இராணுவ மகளிர் படையணி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.